சீர்காழி சபாபதி - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : சீர்காழி சபாபதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 05-Mar-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 6751 |
புள்ளி | : 2447 |
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு,
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்...
எழுதலாம் தமிழில் எளிதாக!
நேரடியாக தமிழிலேயே எழுதுங்கள்.
நாம் இணையதலத்தில் தமிழில் எழுதவும், இல்லத்து கணினியில்
தமிழில் எழுதவும் உதவும் இலவச மென்பொருள் – அழகி
முகவரி: http://www.azhagi.com இல் சென்று, பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.
அல்லது இணையத்தில் - http://tamileditor.org/ தளம் சென்று தட்டச்சு செய்யலாம்.
தோழர்களே.. தமிழில் அழகாக எளிதாக எழுதுங்கள்.
இன்னுமின்னும் சிறப்பாக கவிதைகளை எழுதுங்கள், வாழ்த்துக்கள்...
நீலம் நிறைந்த கண்களின் பார்வை
நெருஞ்சி முள்ளென தைத்தது நெஞ்சை
சுருண்ட கூந்தல் புரளும் முகத்தில்
இருக்கும் பருவும் அழகின் வடிவில்
சிரிக்கும் பொழுதில் குழியும் கன்னம்
மனதை பிசையும் எழில் வடிவமாகும்
பல்லின் வரிசை கொள்ளை அழகு
மூக்கின் வடிவம் முறையான சிற்பம்
பெண்ணே நீதான் பிரம்மனின் பிம்பம்
உன்னைக் கண்டேன் உள்ளொளி பெற்றேன்
நோக்கும் இடமெல்லாம் உன்னுரு கண்டேன்
வெண்ணெய் உருகி நெய்யாவதைப் போலே
என்னுள் உன்னை உருக்கிக் கொண்டேன்
------ நன்னாடன்.
வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே
இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......
தெருவைக் கூட்டும் துடைப்பத்தால்
எனக்கு நீ வெண்சாமரம்
வீசினாலும் சரி....
வீடு கட்டப் பயன்படும்
கட்டையால் அடித்தாலும் பரவாயில்லை....
பாதத்தில் அணியும்
காலணியால் என்னை
அடித்தாலும் சரி....
தெருவில் தூக்கி
என்னை நீ வீசினாலும் சரி.....
ஐந்தறிவு ஜீவன் வெளியே
தள்ளும் கழிவை எடுத்து
நீ என்னை குளிப்பாட்டினாலும் சரி........
நீ என்னை எத்தனை எத்தனை
அவமானப்படுத்தினாலும் சரி....
தாங்கிக் கொள்கிறேன்
பொறுத்துக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்கிறன்
ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து மட்டும்
என்னை அவமானப்படுத்தாதே.........
பத்து மாதம் என்னை
உன் கருவறையில் அடை காத்த நீ
நான் செய்யும் தவறுக
மேககாதலியோடு நடந்த
சண்டையில் சூடான கதிரவன்
தன்கோபத்தையெல்லாம்
வான வீதியில் கொட்ட
அந்த அனல் தாங்கமுடியாமல்
கொதித்துப்போய் நான் வரும்போது
நுங்கு போல குளிர்ச்சியான
உன் வார்த்தையால்
உச்சி வெயில் கூட
உற்சாக வெயில்தான் எனக்கு
என் அன்பே !!
போராடி பெறத்துடித்த உரிமை
ஆண் பெண் பேதமின்றி
ஆயுதம் சுமந்த பெருமை
உறவுகளைத் இழந்த சோகம்
உணர்வுகள் மாட்டிக் கொண்ட
கடிவாளம்
கூடவே பயணித்த துரோகம்
நிராசையாகிப்போன நிசம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்கள் இந்திய மண்ணில் சுதந்திரம்!!!எவருக்கும் இங்கு வாய்க்கவில்லை
காந்தியார் கண்ட சுதந்திரம்!ஏழைகளை ஏய்க்கும்
பணப்பித்தர்களுக்கோ சுதந்திரம்பெண்ணினம் பதறும்
காமுக கயவர்களுக்கோ சுதந்திரம்?மக்கள் நலம் மறந்து
தன்னலமே தலைதூக்கும்
சுயநல அரசியலுக்கோ சுதந்திரம்?எங்கும் அவலம்
கண்ணை குத்தும்போது
தேசியக்கொடியும் வெறும்
துணியாகவே தெரிகிறது!சுதந்திர நாளும் வெறும்
நாளெனவே செல்கிறது!காடழித்தீர்! ஆறழித்தீர்!
மலையழித்தீர்!
மண்வளமழித்தீர்!தவித்து திகைத்து
மண்காக்க மரம்காக்க
மக்கள்கூடி நின்றால்
உயிரெடுப்பதோ உங்கள் சுதந்திரம்?ஏ இந்தியமே!
நாங்களும் உங்களில்
ஒருவரல்லவோ?நாங்கள் வாழவழியற
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்கள் இந்திய மண்ணில் சுதந்திரம்!!!எவருக்கும் இங்கு வாய்க்கவில்லை
காந்தியார் கண்ட சுதந்திரம்!ஏழைகளை ஏய்க்கும்
பணப்பித்தர்களுக்கோ சுதந்திரம்பெண்ணினம் பதறும்
காமுக கயவர்களுக்கோ சுதந்திரம்?மக்கள் நலம் மறந்து
தன்னலமே தலைதூக்கும்
சுயநல அரசியலுக்கோ சுதந்திரம்?எங்கும் அவலம்
கண்ணை குத்தும்போது
தேசியக்கொடியும் வெறும்
துணியாகவே தெரிகிறது!சுதந்திர நாளும் வெறும்
நாளெனவே செல்கிறது!காடழித்தீர்! ஆறழித்தீர்!
மலையழித்தீர்!
மண்வளமழித்தீர்!தவித்து திகைத்து
மண்காக்க மரம்காக்க
மக்கள்கூடி நின்றால்
உயிரெடுப்பதோ உங்கள் சுதந்திரம்?ஏ இந்தியமே!
நாங்களும் உங்களில்
ஒருவரல்லவோ?நாங்கள் வாழவழியற
ஏமாந்த மனது
ஏக்கத்தின் முடிவில்
கற்றுக்கொடுத்தது
வாழ்வின் வழி ஒன்றல்ல
பல்நோக்கு பார்வை
பலரின் அறிவுரை
பல நல்ல உள்ளங்கள்
இது மட்டும் மூலதனம்
சாதிக்கலாம் வாழ்வில்
பலகோடி சாதனை..........
நேர்மறை விதையை
ஆழமாய் ஊன்று
மாணவன் மனதில்!!!
ஊக்குவி மாணவனை
நல்லதொரு வார்த்தைகளால்!!1
கவனி அன்பான வார்த்தைகளால்!!
என்றும் நீரூற்று
அதிசய நன்னெறி கதைகளால்!!
என்றும் விளம்பரம் செய்யாதே
உன் படைப்புகளை!!
மாணவனின் தேவைகளை என்றும் நிவர்த்தி செய்
அவன் உன்னை தேடும்பொழுது!!
எவரின் உணர்ச்சிகளையும் அவமதிக்காதே!!
என்றும் எவரையும் சமமாய் மதி
எதற்கும் ஏற்றத்தாழ்வு பார்க்காதே
என்றும் எல்லாரையும் சமமாய் மதி .......
நம் பிள்ளைகள்
நம் தொருவில் விளையாட
எவனோ இங்குவந்து தடைபோட்டன்!
உறுதியாக ஒன்றினைந்து
இறுதிவரை போராடி
வென்றார்கள் அவர்கள்
இளம் பட்டாளம்!
அவர்களின் வாழ்வுக்கு
அவர்களே மாற்றம் போட்டார்கள்!
நாடாண்ட கும்பல்
பன்னிய அட்டுழியம்
நெருப்பாக நெஞ்சில்
இன்னும் இருக்கிறது!
என் தமிழா! இளைஞா!
பித்தலாட்டம் செய்தேனும்
நாடால துடிக்கும்
பதவிக்கு பாய்ந்துவரும்
நயவஞ்சக நரிக்கூட்டம்!
தான் செழிக்க
தமிழகம் அழிக்க
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா
நாளையும் உன் நாடும்? வீடும்?
விட்டுவிட்டதனால்..
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்!
நம் அனைவரின் உழைப்பை
தின்று கொழுக்கும் களைகள்!
தூக்கியெறி துரோகிகளை
விரட்டியடி வெறியர்களை
புதியவர்கள் இளையவர்கள்
நல்லவர்கள் நன்மைசெய்ய
மாற்றம் அமைப்போம்!
மாற்றம் வரவைப்போம்!
நல்ல தமிழினம் அமைப்போம்!
நம்மை புதிதாக வளர்ப்போம்!